இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட்: கெத்து காட்டிய இலங்கை வீரர்கள்
இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இலங்கை லெவன் 363 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
கொழும்பு பயிற்சி டெஸ்டில் இலங்கை அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் குவித்துள்ளது.
மதுஷ்கா, ரவிந்து
இலங்கை லெவன் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை லெவன் அணியில் தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினர். இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 110 ஓட்டங்கள் குவித்தது.
நிஷான் மதுஷ்கா ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து பசிந்து சூரியபந்தாரா 35 ஓட்டங்களில் வெளியேற, ரவிந்து ரசந்த 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த பவன் ரத்னயாகே 39 ஓட்டங்களும், அஹன் 31 ஓட்டங்களும் எடுத்தனர். அரைசதம் அடித்த அணித்தலைவர் சோனல் தினுஷா (Sonal Dinusha) 52 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
முதல் நாள் முடிவில் இலங்கை லெவன் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஜடேஜா, குல்தீப் மற்றும் மானவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |