2026 ஆம் ஆண்டின் Baguette ரொட்டி வெற்றியாளர்! பாரிஸில் இலங்கை தமிழர் சாதனை
பாரிஸின் பாரம்பரிய உணவாக கருதப்படும் பகுவெட் ரொட்டி தயாரிப்பதில் இலங்கை தமிழர் புதிய சாதனை படைத்துள்ளார்.
பாரிஸில் இலங்கை தமிழர் சாதனை
பாரிஸின் கலாச்சார உணவாக கருதப்படும் பகுவெட் ரொட்டி(Baguette), அதிகாலை வேலைக்கு செல்பவர்களின் கைகளிலும், செய்ன் நதிக்கரையில் சுற்றி திரியும் சுற்றுலா பயணிகளின் கைகளிலும் தவறாமல் இருக்கும் உணவாக உள்ளது.
மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட பகுவெட் ரொட்டி தயாரிப்பது தொடர்பான 2026ம் ஆண்டுக்கான “கிராண்ட் பிரிக்ஸ் டி லா பகுவெட்” (Grand Prix De la Baguette) விருதை கடந்த பிப்ரவரி 26ம் திகதி பாரிஸ் மாநகராட்சி அறிவித்தது.

இந்த விருதை சித்தாம்பரப்பிள்ளை ஜெகதீபன்( Sithamparappillai Jegatheepan) என்ற இலங்கையை பூர்விகமான கொண்ட தமிழர் தட்டிச் சென்றுள்ளார்.
மிகவும் சவாலானதாக கருதப்படும் இந்த போட்டியில் சித்தாம்பரப்பிள்ளை ஜெகதீபனின் “போர்னில் டிடோவ்(Fournil Didot) பேக்கரி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இது தொடர்பாக ஜெகதீபனின் தெரிவித்த தகவலில், நான் வெற்றி பெறுவேன் என கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பகுவெட் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாரிஸின் 14வது வட்டாரத்தில் அமைந்துள்ள ஜெகதீபனின் “போர்னில் டிடோவ் பேக்கரிக்கு மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.
சிறந்த ரொட்டி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது?
கிட்டத்தட்ட 143 ரொட்டிகள் இந்த ஆண்டு நடுவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பாரிஸின் துணை மேயர் தலைமையிலான நிக்கோலா போனெட் உலாட்ஜ் தலைமையிலான குழு 5 முக்கிய காரணிகளின் கீழ் ஆய்வு செய்து இந்த விருதை அறிவித்துள்ளனர்.
5 முக்கிய காரணிகளின் கீழ், மணம் மற்றும் சுவை, ரொட்டியின் மென்மையான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட உட்புறம், பொன்னிறமான மற்றும் மொறுமொறுப்பான வெளித்தோற்றம், உப்பு அளவு, வேகவைக்கப்பட்ட தரம் ஆகியவை உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |