பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம்: இலங்கை அரசு சொல்வது என்ன?

Government Sri Lanka Pakistan Imran Khan Sri Lankan Burnt
By Ragavan Dec 04, 2021 12:24 PM GMT
Report

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் Sialkot நகரில் உள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்த இலங்கையரான பிரியந்த குமார தியவடன, அங்கிருக்கும் தொழிற்சாலை ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, அதன் பின் தீ வைத்து கொலை செய்யப்பட்டார்.

இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த பிரியந்த குமார தியவடன, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் Sialkot நகரில் இருக்கும் Rajco தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

பிரியந்த குமார தியவடன, கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் வசித்து வந்ததாகவும், இதற்கு முன்பு இவர் லாகூர் மற்றும் பைசலாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில் பணிபுரிந்துள்ளார்.

பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம்: இலங்கை அரசு சொல்வது என்ன? | Sri Lankan Burnt Killed Pakistan Government

40 வயதான பிரியந்த குமார தியவடன, பாகிஸ்தானில் ஒரு குழுவினரின் மதத்தலைவரான Muhammad ibn Abdullah-வின் பெயர் கொண்ட சுவரொட்டிகளை இழிவு படுத்தியதன் காரணமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொடூர சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் "சியால்கோட்டில் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். நான் விசாரணைகளை மேற்பார்வையிட்டு வருகிறேன், எந்த தவறும் செய்யக்கூடாது, இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முழுக்கடுமையுடன் தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசு சொல்வது என்ன?

இலங்கையில் சட்டம் - ஒழுங்கு நிலையைப் பராமரிப்பது கருதி பிரியந்த குமார தியவடன குறித்த தகவல்களை இலங்கை அரசு இன்னும் வெளியிடவில்லை என்று இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிக கொடூரதமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மிக வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரசு சார்பாக, அந்நாட்டு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதை வரவேற்பதாகவும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பிலான முழுமையாக தகவலை பெற்றுக்கொள்வதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,

"பாகிஸ்தானில் தீவிரவாத கும்பலால் நிகழ்த்தப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை மூர்கத்தனமானது. அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளதைப் பாராட்டும் அதே வேளையில், தீவிரவாத சக்திகள் சுதந்திரமாக உலவ அனுமதித்தால், அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பது பற்றி நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளர்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US