இலங்கையில் பெட்ரோல் இல்லை.. ஆனாலும் அவரை காண வந்தேன்... பெரியளவில் வைரலான ரசிகர்
இலங்கையில் பெண்கள் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடக்கும் நிலையில் ரசிகர் ஒருவர் தான் கையில் ஏந்திய பதாகை மூலம் வைரலாகியுள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே முதல் போட்டி முடிந்துவிட்ட நிலையில் இன்று இரண்டாவது போட்டி தம்பலாவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியை காண ரசிகர்கள் பலர் மைதானத்திற்கு வந்துள்ளனர். அதில் ஒரு ரசிகர் மைதானத்தில் அமர்ந்தபடி கையில் வைத்திருந்த பதாகையால் வைரலாகியுள்ளார்.
Smriti Mandhana fans in Sri Lanka. pic.twitter.com/gZny0Irm9q
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 25, 2022
ஏனெனில் அதில், பெட்ரோல் இல்லை, ஆனாலும் ஸ்மிருதி மந்தனாவை காண மைதானத்திற்கு வந்தேன் என எழுதப்பட்டுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.