3 முறை கழுத்தை நெரித்தார்: இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த அவுஸ்திரேலிய பெண்
தனது வீட்டில் தனுஷ்கா குணதிலகவால் நான்கு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றசாட்டு.
இந்த வழக்கு ஜனவரி 12-ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வர உள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகவினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய சிட்னி பெண் ஒருவர், அவருடனான தனது டேட் ஒரு கெட்ட கனவாக மாறியதாக பொலிஸாரிடம் கூறினார்.
நவம்பர் 2-ஆம் திகதி சிட்னியின் ரோஸ் பேயில் உள்ள தனது வீட்டில் தனுஷ்கா குணதிலகவுடன் மது அருந்தவும் பீட்சாவும் சாப்பிடவும் சென்ற அப்பெண் நான்கு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்காக அவுஸ்திரேலியாவிற்குச் சென்றிருந்த இலங்கைக் கிரிக்கெட் அணியில் அவர் தங்கியிருந்த சிட்னியில் உள்ள ஹயாட் ரீஜென்சி ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குணதிலகா கைது செய்யப்பட்டார்.
அவர் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
காவலில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கான அவரது விண்ணப்பம் திங்களன்று மாஜிஸ்திரேட் ராபர்ட் வில்லியம்ஸால் நிராகரிக்கப்பட்டது. மேலும், வழக்கின் சில விவரங்களை புதன்கிழமை வரை ஊடகங்களில் வெளியிட மாஜிஸ்திரேட் தடை விதித்தார்.
டவுனிங் சென்டர் லோக்கல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொலிசாரின் உண்மைத் தாளின் (facts sheet) படி, இருவரும் டிண்டர் டேட்டிங் ஆப்பின் மூலம் அறிமுகமானதாகவும், பின்னர் சிட்னி ஓபரா ஹவுஸுக்கு அருகிலுள்ள ஒரு பாரில் நேரில் சந்திப்பதற்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் பல வீடியோ அழைப்புகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் வெளியிடப்படாத அப்பெண், குணதிலக தனது வீட்டிற்கு படகு சவாரியில் வந்தபோது தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாகவும், தனது பின்புறத்தில் அடித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர்கள் அவரது வீட்டிற்கு வந்த பிறகு, குணதிலக ஆணுறை அணிய மறுத்ததாகவும், மேலும் அப்பெண்ணின் கழுத்தை மூன்று முறை நெரித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
புகார்தாரர் அவரது மணிக்கட்டைப் பிடித்து குணதிலகவின் கையை அகற்ற முயன்றதாகவும், ஆனால் அவர் அப்பெண்ணின் கழுத்தை இறுக்கமாக இறுக்கினார் என்று பொலிஸ் ஆவணங்கள் குற்றம் சாட்டுகின்றன. அப்பெண் தனது உயிருக்கு பயந்து, அவரிடமிருந்து தப்பிக்க முடியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கட்டாய வாய்வழி உடலுறவு முயற்சியின் போது அப்பெண்ணால் சுவாசிக்க முடியவில்லை என்று நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
அப்பெண் தொடர்ந்து அவரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றுள்ளார், இது அவள் சம்மதிக்கவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறியாகும் என்று பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் விசாரணையில், குணதிலக பாதிக்கப்பட்ட பெண்ணின் சில கதைகளை உறுதிப்படுத்தினார், ஆனால் அவர் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும் அப்பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதை மறுத்தார்.
அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ள சம்மதிக்கவில்லை அல்லது நடந்த பிற பாலியல் செயல்களில் ஈடுபடவில்லை என்று வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த வழக்கு ஜனவரி 12-ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வர உள்ளது.
அதற்கு முன்னதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில உச்ச நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக குணதிலகவின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.