இலங்கையில் கல்வீசி தாக்கிய மகள் மற்றும் பேரக்குழந்தைகள்: பரிதாபமாக உயிரிழந்த தாய்
இலங்கையின் குருநாகலில் இரண்டு பிள்ளைகளுக்கு இடையிலான சண்டையை தடுக்க முயன்ற தாய் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
ஒருவருக்கு ஒருவர் கல்வீசி தாக்கி கொண்ட போது பிள்ளைகள் வீசிய கல்லில் தாக்கப்பட்டு தாய் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்த தாயின் மகள் மற்றும் பேரன் ஆகியோரை கோகரெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இப்பாகமுவ பகுதியில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சகோதர - சகோதரி இடையே மோதல்
உயிரிழந்த தாயின் மகளும், மகனும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே கடந்த சில காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
அவ்வப்போது இருக்கும் இடையே மோதல்கள் வெடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் கற்களால் வீசி தாக்கிக் கொண்டுள்ளனர்.
பெரியவர்களுக்கு இடையிலான இந்த கல்வீச்சு சண்டையில் உயிரிழந்த மூதாட்டியின் பேரப்பிள்ளைகளும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சண்டையை தடுக்க முயற்சி செய்த மூதாட்டி முகத்தில் மீது கல் தாக்கியதில் முதலில் மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் சிகிச்சைக்காக குருநாகல் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |