நேட்டோ வான் பரப்புக்குள் நுழைந்த டிரோன்கள்: விளக்கம் கேட்டு ரஷ்ய தூதருக்கு ஜேர்மனி அழைப்பு
ட்ரோன் தாக்குதல் தொடர்பாக விளக்கம் கேட்டும் ரஷ்ய தூதருக்கு ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்ய தூதருக்கு அழைப்பு
சமீபத்தில் போலந்து வான் பரப்பிற்குள் ரஷ்யாவின் டிரோன்கள் அத்துமீறி நுழைந்தன.
இது சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தியதுடன், நேட்டோ படைகள் முதல் முறையாக ரஷ்ய படைகளின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது.
நேட்டோ உறுப்பு நாடொன்றின் எல்லைக்குள் ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் கிழக்கு எல்லையை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் நேட்டோ உறுப்பு நாட்டின் வான்பரப்பில் ரஷ்யா அத்துமீறி நுழைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது மற்றும் ஆபத்தானது என ஜேர்மனி எச்சரித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக விளக்கமளிக்க ரஷ்ய தூதர் செர்ஜி நெச்சாயெவுக்கு ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
X தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கள் கூட்டாளிகளின் பிராந்தியத்தை பாதுகாக்க நேட்டோ உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து நிற்பதாக தெரிவித்துள்ளது.
அதே சமயம் அத்துமீறல் தொடர்பான எந்தவொரு ஈடுபாட்டையும் ரஷ்யா மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |