பிரித்தானிய இளவரசர் ஹரி கீவ் பயணம்: ரஷ்யாவின் மீது புதிய தடைகள் அறிவிப்பு
பிரித்தானிய இளவரசர் ஹரி போரில் காயமடைந்த வீரர்களை சந்திப்பதற்காக உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இளவரசர் ஹரி கீவ் பயணம்
போர் நடைபெறும் நாடான உக்ரைனுக்கு பிரித்தானிய ராணுவத்தில் சேவையாற்றிய அனுபவம் கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி உக்ரைனிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கீவ்விற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யா உடனான மோதலின் போது படுகாயமடைந்த இராணுவ வீரர்களின் மறுவாழ்வு மற்றும் உடல்நல முன்னேற்றம் ஆகியவற்றிக்கு உதவுவதே இளவரசர் ஹரி பயணத்தின் முக்கிய நோக்கமாக சொல்லப்படுகிறது.
By invitation of the Ukrainian Government, #PrinceHarry makes a surprise visit to Ukraine pledging support for thousands injured in war, Harry arrived with his Invictus Games Foundation team who will detail new initiatives to support those wounded in the war. #GoodKingHarry… pic.twitter.com/kpbO52L0xV
— SK 💃🏾🕺 (@Rimmesfk) September 12, 2025
இதே நேரத்தில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் Yvette Cooper-உம் கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானிய வெளியுறவு செயலாளர் Yvette Cooper-இன் இந்த பயணம், ரஷ்யாவிற்கு எதிரான பிரித்தானியாவின் புதிய பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
புதிய தடைகள் கீழ் ரஷ்ய எண்ணெய், எலெக்ட்ரானிக்ஸ், ரசாயனங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |