அமெரிக்காவில் காணாமல் போன 9 இலங்கை கடற்படையினர் இல்லாமல் நாடு திரும்பும் கப்பல்!
பயிற்சி முடிந்து தாயகம் செல்லவிருந்த 9 இலங்கை கடற்படையினர் அமெரிக்காவில் காணாமல் போயுள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட போதிலும் அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் காணாமல் போன ஒன்பது இலங்கை கடற்படை மாலுமிகள் இன்னும் கன்டுபிடிக்கப்படாததால், அவர்கள் இல்லாமலேயே நாட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.
அவர்கள் 9 பேரும் RIMPAC 2022 பயிற்சியில் இணைவதற்காக ஜூன் மாதம் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட 50 பேர் கொண்ட குழுவைச்ச சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை பயிற்சி முடிந்த பிறகு அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் USCGC Douglas Munro கப்பலில் நாடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தனர்.
ஆனால், ஜூலை மாத இறுதியில் அவர்கள் தங்கள் பணியிடத்திலிருந்து தப்பிச் சென்றனர். அவர்கள் இலங்கையின் பொருளாதார நிலைமையின் காரணமாக அமெரிக்காவிலேயே தங்கிவிடலாம் என்ற நோக்ககத்தில் அங்கிருந்து தப்பியிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதுபோன்ற நிகழ்வைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் அவர்களைக் கண்டறிவதற்கான இலங்கையின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மொத்த குழுவுடன் தாயகம் திரும்பவேண்டிய இலங்கை கடற்படைக் கப்பல் P 627, கடந்த வாரம் அந்த 9 பேர் இல்லாமலே அமெரிக்காவின் Seattle நகத்திலிருந்து புறப்பட்டது.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள், ஆறு இலங்கை மாலுமிகள் தங்கள் கப்பல்கள் அமெரிக்கக் கரையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் காணாமல் போனதாக ஐலண்ட் தெரிவித்துள்ளது. இது 2014 மற்றும் 2018-ல் நடந்தது. அவை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கு முன்னர் 2014 மற்றும் 2018 என இரண்டு முறை, ஆறு இலங்கை மாலுமிகள் தங்கள் கப்பல்கள் அமெரிக்கக் கரையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் காணாமல். அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.