கனடாவில் சிறுவனை துன்புறுத்திய இலங்கையர்: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை
Sri Lankan Old Man Arrested in Canada: கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனை துன்புறுத்திய இலங்கையர்
கனடாவின் விட்பி பகுதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த 62 வயது சம்பத் பெரேரா என்ற இலங்கையர், மோசமான செயல் காரணமாக கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அந்த மருந்தகத்தில் பணியாற்றி வந்த சிறுவன் ஒருவனை தகாத முறையில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில் டர்ஹாம் பிராந்திய பொலிஸார் சந்தேக நபரான சம்பத் பெரேரா-வை கைது செய்தனர்
சம்பத் பெரேரா மீது தகாத முறையில் செயல்பட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆனால் இது தொடர்பாக நீதிமன்றம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த இந்த நபரால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் உடனடியாக முன்வந்து புகார் அளிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.