ஐன்ஸ்டீனை விட புத்திசாலி! பிரித்தானியாவில் இலங்கை வம்சாவளி சிறுமியின் மிரளவைக்கும் ஐக்யூ மதிப்பெண்

Sri Lankan Peoples
By Ragavan Nov 19, 2022 10:01 AM GMT
Report

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பிரித்தானியாவில் IQ தேர்வில் எதிர்பாராத மதிப்பெண்களை எடுத்து விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட புத்திசாலி என கூறப்படுகிறார்.

பிரித்தானியாவில் பள்ளியில் படுத்துவரும் 10 வயதான அரியானா தம்பரவா ஹேவகே (Ariana Dambarawa Hewage), Mensa IQ தேர்வில் பங்கேற்று 162 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இது "மேதை" நிலை என்று கருதப்படுகிறது.

அறிவியல் மேதைகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங், அறிவுத்திறனின் அளவுகோல்களாகக் கருதப்படுகின்றனர், இருவருமே 160 IQ-ஐக் கொண்டுள்ளனர். ஆனால், அரியானா அவர்களை முறியடித்து, இப்போது உயர் IQ சொசைட்டியான மென்சாவில் உறுப்பினராக அழைக்கப்பட்டுள்ளார்.

ஐன்ஸ்டீனை விட புத்திசாலி! பிரித்தானியாவில் இலங்கை வம்சாவளி சிறுமியின் மிரளவைக்கும் ஐக்யூ மதிப்பெண் | Sri Lankan Origin School Girl Smart Than EinsteinImage: Dambarawa Hewage Family

அரியானா புத்தகங்களை நேசிக்கிறார் மற்றும் கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் கொண்டுள்ளார். யார்க்ஷயர் லைவ் அறிக்கையின்படி, ஹடர்ஸ்ஃபீல்டில் உள்ள St Patrick’s Catholic Primary Academy-ல் படிக்கும் அரியானா, ஒரு நாள் பிரபல விஞ்ஞானியாக மாறுவார் என்று நம்புகிறார்.

படிக்கும் ஆர்வமுள்ள அரியானா, சமீபத்தில் மேற்கு யார்க்ஷயரில் உள்ள இலக்கணப் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு எழுதினார். அப்போது, அவர் விண்ணப்பித்த ஒவ்வொரு பள்ளியும் அவருக்கு சலுகை வழங்கியபோது, அவரிடம் எவ்வளவு திறன் உள்ளது என்று பெற்றோருக்கு தெரியவந்தது.

"அவள் என் மேதை" என்று கூறிய அறியானாவின் தந்தை ஜனகா கூறியதாவது: “சமீபத்தில் அவள் தேர்வு எழுதியபோது அவள் எவ்வளவு புத்திசாலி என்பதை நாங்கள் உணர்ந்தோம். எல்லாப் பரீட்சையும் எளிதாகத் தேர்ச்சி பெறுகிறாள். அவள் வாசிப்பு, அறிவியலை விரும்புகிறாள், காலப்பயணத்தைப் பற்றி எப்போதும் என்னிடம் பேசுகிறாள்" என்று கூறினார்.

ஐன்ஸ்டீனை விட புத்திசாலி! பிரித்தானியாவில் இலங்கை வம்சாவளி சிறுமியின் மிரளவைக்கும் ஐக்யூ மதிப்பெண் | Sri Lankan Origin School Girl Smart Than EinsteinImage: Dambarawa Hewage Family

"தேர்வு சுமார் இரண்டு மணி நேரம் இருந்தது., அவள் வெவ்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டாள்., இது மிகவும் நீளமாக இருந்தது. அவர் 162 மதிப்பெண்களைப் பெற்றார், இது நாட்டில் ஒரு சிறிய சதவீத மக்கள் மட்டுமே பெற முடியும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை விட இரண்டு மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார்" என்றார்.

எதிர்காலத்தில் அரியானா அறிவியல் போட்டிகளில் கலந்துகொள்வாள் என்றும், அவருடைய புதிய 'மேதை' அந்தஸ்து அவரை படிப்பில் ஊக்குவிக்கும் என்றும் அவரது பெற்றோர் நம்புகிறார்கள். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US