டி20 உலகக்கிண்ணத் திருவிழா: சாதனைப் பட்டியலில் இடம்பெற்ற இலங்கை வீரர்கள் (ஒரு பார்வை)
இதுவரை நடந்துள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் சாதனைப் பட்டியலில் இடம்பெற்ற இலங்கை வீரர்கள் குறித்து இங்கே காண்போம்.
9வது உலகக்கிண்ணத் தொடர்
2007ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கிண்ண தொடர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் 9வது உலகக்கிண்ணத் தொடர் சூன் 2ஆம் திகதி தொடங்குகிறது.
இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா (39) மற்றும் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் (36) ஆகிய இருவர் மட்டுமே அனைத்து உலகக்கிண்ண தொடர்களிலும் விளையாடிய வீரர்கள் ஆவர்.
ஆனால் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில், இலங்கையின் திலகரத்னே தில்ஷன் (35) மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி (1141) முதலிடத்திலும், மஹேல ஜெயவர்த்தனே (1016) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். கிறிஸ் கெய்ல் (965),ரோஹித் ஷர்மா (963), திலகரத்னே தில்ஷன் (897) முறையே 3 முதல் 5 இடங்களில் உள்ளனர்.
விக்கெட் கீப்பிங்கில் அதிக பேரை ஆட்டமிழக்க செய்தவர்கள்:
- எம்.எஸ்.தோனி 32 (21 கேட்ச், 11 ஸ்டம்பிங்)
- கம்ரான் அக்மல் 30 (12 கேட்ச், 18 ஸ்டம்பிங்)
- டேனேஷ் ராம்டின் 27 (18 கேட்ச், 9 ஸ்டம்பிங்)
- குமார் சங்கக்கரா 26 (12 கேட்ச், 14 ஸ்டம்பிங்)
- குவிண்டன் டி காக் 22 (17 கேட்ச், 5 ஸ்டம்பிங்)
ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சு
- அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) - 6/8 in 4 ஓவர்ஸ்
- ரங்கனா ஹெராத் (இலங்கை) - 5/3 in 3.3 ஓவர்ஸ்
- உமர் குல் (பாகிஸ்தான்) - 5/6 in 3 ஓவர்ஸ்
- சாம் கர்ரன் (இங்கிலாந்து) - 5/10 in 3.4 ஓவர்ஸ்
- அஹ்ஷான் மாலிக் (நெதர்லாந்து) - 5/19 in 4 ஓவர்ஸ்
- ஆடம் ஜம்பா (அவுஸ்திரேலியா) - 5/19 in 4 ஓவர்ஸ்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |