பிரித்தானியாவில் இலங்கை கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: மருத்துவமனையில் நடந்த கொடூரம்
மருத்துவர்கள் கவனக்குறைவால் பிரித்தானியாவில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்து இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் கவனக்குறைவை விசாரணையின் இறுதியில் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
தனாஞ்சி டொனா என்ற 33 வயது இலங்கை பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 வயதான கர்ப்பிணி பெண் தனாஞ்சி டொனா, சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருந்ததால் உயிரிழந்ததாக அவர் கணவர் கவலை தெரிவித்துள்ளார்.

தீவிர வயிற்று வலி
கர்ப்பிணியான தனாஞ்சி டொனாவுக்கு செப்சிஸ் என்ற தொற்று பாதிப்பு இருந்ததன் காரணமாக உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனாஞ்சி டொனாவுக்கு வயிற்று வலி மற்றும் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
பின் உடனடியாக ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனாஞ்சி டொனா நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார் என நார்த் ஸ்டாபோர்ட்ஷயர் கரோனர் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தனாஞ்சி டொனா, 15 நிமிடத்திற்குள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் மருத்துவமனை கிட்டத்தட்ட 2 மணி நேரம் 3 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனாஞ்சி டொனாவுக்கு செப்சிஸ் நோய் தொற்றை கண்டறியும் கருவியையும் ஊழியர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |