பிரான்ஸில் தேடப்படும் குற்றவாளி: இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்
குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழர் கைது
பிரான்ஸில் பெண் ஒருவரை தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதுடைய இலங்கை தமிழர், தேசிய குற்றவியல் அமைப்பின் நாடுகடத்தல் அதிகாரிகளால் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு தேசிய குற்றவியல் அமைப்பின் நாடு கடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முதற்கட்டமாக அவர் விசாரணையின் கீழ் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர் தொடர்பான நாடுகடத்தல் விசாரணையை 2026 மார்ச் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |