அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு தகுதி பெற்ற மகள்! பெருமகிழ்ச்சியில் இலங்கை தமிழ் குடும்பம்
நிறைமாத கர்ப்பிணி மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன் படகில் அவுஸ்திரேலியாவிற்கு வந்தோம்.
இளைய மகளுக்கு கிடைத்துள்ள அதே அந்தஸ்து மற்ற இரண்டு மகள்களுக்கும் கிடைக்க வேண்டுகிறோம்.
அவுஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெரும் தகுதியை அடைந்துள்ளார். அவரது குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பதில்கடிதம் கிடைத்துள்ளது.
இதனால், மொத்த குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இது அங்கீகரிக்கப்படாத குடும்பத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
NEIL PARA/Facebook
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள Ballarat நகரத்தில் வசிக்கும் நீலவண்ணன் பரமானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகள் நிவேவின் 10-வது பிறந்தநாளை அக்டோபர் 24-ஆம் திகதி அன்று, நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.
ஏனெனில் அவர்களுக்கு இது தங்கள் குழந்தையின் சாதாரண பிறந்தநாள் அல்ல, இந்த குடும்பத்திற்கும் அவர்களை அறிந்தவர்களுக்கு இது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
NEIL PARA/Facebook
அப்பா (நீலவண்ணன்), அம்மா, மூன்று பெண் குழந்தைகள் கொண்ட இந்த குடும்பத்தில், அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஒரே உறுப்பினர் என்றால், அது அவர்களது கடைசி மகள் நிவே மட்டும் தான்.
நீலவண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது குடும்பத்தின் புகைப்படத்தையும், மகள் குடியுரிமைக்கு தகுதி பெற்றிருக்கு மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.
NEIL PARA/Facebook
2012-ல் நிவே தனது தாயின் வயிற்றில் இருக்கும்போது, இந்த குடும்பம் இலங்கையில் இருந்து படகில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றது. உயிருக்கு பயந்து அவரது குடும்பம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் நிவே அவுஸ்திரேலியாவில் பிறந்தார்.
பிறந்தநாள் கொண்டாடிய இரண்டு நாட்களில், அக்டோபர் 26-ஆம் திகதி, புதன்கிழமை மாலை, குடும்பத்தாருக்கு அவர்களின் விண்ணப்பம் வெற்றியடைந்ததாகவும், நிவே இப்போது அதிகாரப்பூர்வமாக அவுஸ்திரேலிய குடிமகனாக இருப்பதாகவும் ஒரு கடிதம் வந்தது.
NEIL PARA/Facebook
பெற்றோர்கள் அவுஸ்திரேலிய குடிமக்களாக அல்லது பெற்றோர்களில் தாய் தந்தை யாரேனும் ஒருவர் அல்லது இருவருமே அவுஸ்திரேலியாவின் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருந்தால் மட்டுமே அவுஸ்திரேலியாவில் பிறக்கும் குழந்தைகள் குடியுரிமை பெறமுடியும்.
நீலவண்ணன் குடும்பத்தினர் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக விசா அந்தஸ்து ஏதுமின்றி பல்லாரத்தில் வசித்து வரும் நிலையில், இப்போது நிவே குடியுரிமை பெற தகுதி பெற்றிருப்பது அவர்களுக்கு புதிய நம்பிக்கையைத் தருகிறது.
"இது எங்களுக்கு மிகவும் நல்ல செய்தி. உடனடியாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்ந்தோம், ஆனால் விரைவில் எங்களுக்கும் மற்ற இரண்டு மகள்களுக்கும் இது நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று நீலவண்ணன் கூறியுள்ளார்.
NEIL PARA/Facebook