ஹோட்டலில் வெடித்த தகராறு: கனடாவில் இலங்கைத் தமிழர் உட்பட 3 பேர் கைது
கனடாவில் இலங்கைத் தமிழ் இளைஞர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழர் கனடாவில் கைது
கனடாவில் தகராறில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் இளைஞன் உட்பட 3 சந்தேக நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மூவரும் ரொரன்ரோவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த வன்முறைத் தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பே ஸ்ட்ரீட் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

தப்பி ஓடிய நபர்கள்
சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதற்கு முன்னதாகவே தகராறில் ஈடுபட்டவர்கள் அங்கியிருந்து தப்பியோடியுள்ளனர்.
இருப்பினும் பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் காரணமாக இலங்கையை சேர்ந்த 30 வயதான பிரவீன் ஜெகதீஸ்வரன் உட்பட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹோட்டலில் அறை ஒன்றை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட வார்த்தை தகராறு வன்முறையாக மாறியதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |