பிரித்தானியாவில் பணி செய்ய பெருந்தொகை கொடுத்த இலங்கைத் தமிழர்கள்: உருவாகியுள்ள சிக்கல்

Sri Lanka United Kingdom Rishi Sunak
By Balamanuvelan May 24, 2023 09:59 AM GMT
Report

பிரித்தானியாவில் பணி செய்வதற்காக பெரும்தொகை செலவு செய்து பிரித்தானியா வந்த இலங்கைத் தமிழர்கள் சிலர், தாங்கள் மோசடி ஒன்றில் சிக்கவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

முன்னர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கும் நுழைந்துவந்த புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா முயற்சிகள் எடுத்துவந்தது.

பிரித்தானியாவில் பணி செய்ய பெருந்தொகை கொடுத்த இலங்கைத் தமிழர்கள்: உருவாகியுள்ள சிக்கல் | Sri Lankan Tamil People Came Uk Scam

Credit:- news sky

தற்போது சட்டப்படி பிரித்தானியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த விரும்புவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இன்னொரு பக்கம், மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், வேறொரு வகையில் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதைக் குறித்த விடயத்தை, பிரித்தானிய ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளிக்கொணர்ந்துள்ளன.

சட்டப்படி புலம்பெயர்வதிலும் மோசடி

சட்டப்படி பிரித்தானியாவுக்கு வரும் புலம்பெயர்வோர், மோசடி ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ள விவகாரத்தை பிரித்தானிய ஊடகங்கள் சில வெளிக்கொணர்ந்துள்ளதால், மேலும் சிக்கல் உருவாகக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. 

பிரித்தானியாவில் பணி செய்ய பெருந்தொகை கொடுத்த இலங்கைத் தமிழர்கள்: உருவாகியுள்ள சிக்கல் | Sri Lankan Tamil People Came Uk Scam

Credit:- news sky

ராதா என்னும் இலங்கைத் தமிழர், பல தலைமுறைகளாக இருந்த சொத்துக்களை விற்று, ஏஜண்ட் ஒருவருக்கு 50,000 பவுண்டுகள் செலுத்தி பிரித்தானியா வர தயாராகியுள்ளார்.

அவர் விமான நிலையத்திற்கு வந்த உடன், அந்த ஏஜண்ட் ஒரு பெண்ணை அவருடன் அனுப்பியுள்ளார். கூடவே ஹிந்துஜன் என்னும் ஒரு பையனும் அனுப்பப்பட்டுள்ளான். அந்த ஏஜண்ட் ராதாவிடம், இந்தப் பெண்ணை உங்கள் மனைவி என்றும், இந்தப் பையனை உங்கள் மகன் என்றும் கூறவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் பணி செய்ய பெருந்தொகை கொடுத்த இலங்கைத் தமிழர்கள்: உருவாகியுள்ள சிக்கல் | Sri Lankan Tamil People Came Uk Scam

Credit:- news sky

மறுத்தால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என மிரட்டப்பட, விமானம் ஏறும் நேரமும் நெருங்க, வேறு வழியில்லாமல், யாரோ ஒரு பெண் மற்றும் பையனை, தன் குடும்பம் என்று கூறி அவர்களுடன் தான் பயணிக்க நேர்ந்ததாக ராதா தெரிவித்துள்ளார்.

மோசடி வெளியானதால் சிக்கல்

இதேபோல பலர், தங்களுக்கு உடன்பாடு இல்லாத நிலையிலும், வேறு சிலரை தங்கள் குடும்பத்தினர் என்று கூறி பிரித்தானியாவுக்கு அழைத்துவந்துள்ளார்கள். தங்களுக்குத் தெரியாமலே தாங்கள் கடத்தல்காரர்களாக செயல்பட வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் பணி செய்ய பெருந்தொகை கொடுத்த இலங்கைத் தமிழர்கள்: உருவாகியுள்ள சிக்கல் | Sri Lankan Tamil People Came Uk Scam

Credit:- news sky

பிரித்தானியா தனது பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக அறிமுகம் செய்த திறன்மிகுப் பணியாளர் விசாவைப் பயன்படுத்தி சிலர் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்புவது தெரியவந்துள்ளதால், சட்டப்படி புலம்பெயர்வோருக்கும் இனி சிக்கல்கள் உருவாகலாம்.

பிரித்தானியாவில் பணி செய்ய பெருந்தொகை கொடுத்த இலங்கைத் தமிழர்கள்: உருவாகியுள்ள சிக்கல் | Sri Lankan Tamil People Came Uk Scam

Credit:- news sky

பிரித்தானிய ஊடகங்களும், இப்படி சட்டப்படியான விசாவைப் பயன்படுத்தி மோசடி செய்து புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்கு அனுப்பும் கும்பல்கள் குறித்து தீவிரமாக செய்தி சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதால், கட்டுப்பாடுகள் மேலும் கடினமாகலாம் என்னும் அச்சம் உருவாகியுள்ளது.  

வீடியோவை காண

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US