இலங்கைத் தமிழ் பின்னணிகொண்ட இளம்பெண்ணின் ஒலிம்பிக் பதக்கக் கனவு கலைந்தது
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண்ணின் பதக்கக் கனவு கலைந்தது.
பதக்கக் கனவு கலைந்தது
பெண்களுக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில், வெண்கலப் பதக்கத்துக்காக ஜப்பானின் நமி மட்சுயாமா, சிஹாரு ஷிதா இணையை எதிர்த்து போட்டியிட்டது, தீனா முரளிதரன் (Thinaah Muralitharan) மற்றும் பியர்லி டேன் (Pearly Tan) என்னும் இருவரைக் கொண்ட மலேசிய இணை.
ஆனால், 21-11, 21-11 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நமி மட்சுயாமா-சிஹாரு ஷிதா இணையிடம் தீனா, பியர்லி இணை தோல்வியடைந்ததால், அவர்களுடைய வெண்கலப் பதக்கம் பெறும் கனவும் கலைந்தது.
வரலாறு படைத்த அணி
என்றாலும், 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில், பெண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் மலேசிய அணி என்னும் வரலாற்றைப் படைத்துள்ளது தீனா, பியர்லி இணை.
இலங்கைத் தமிழ் பெற்றோருக்கு மலேசியாவில் பிறந்த தீனா, அந்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். தீனா, பியர்லி இணை, ஒலிம்பிக்கில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |