பல கனவுகளுடன் ஜப்பானுக்கு சென்ற இலங்கை பெண்ணின் கொடூர மரணம்! நடந்தது என்ன? வெளிவரும் பல அதிர்ச்சி உண்மைகள்

Srilanka Death Jappan
By Kaviarasan Jun 08, 2021 12:44 AM GMT
Report

இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பல கனவுகளுடன் ஜப்பானுக்கு சென்ற நிலையில், அவர் மிகவும் கொடூரமான உயிரிழந்த சம்பவம் குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது,

இலங்கையின் கொழும்புவில் இருக்கும் Kadawatha-வின் Imbulgoda பகுதியைச் சேர்ந்தவர் Sandamali(33). இவர் ஜப்பானில் மிகவும் கொடூரமான முறையில் உயிரிழந்தார். இவரின் மரணம் குடும்பத்தினரை கடும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

பல கனவுகளுடன் ஜப்பானுக்கு சென்ற Sandamali-க்கு  என்ன நடந்தது என்பது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதில் அவருக்கு நேர்ந்த கொடுமைகள், கண்கலங்க வைக்கிறது. Sandamali கடந்த 2017-ஆம் ஆண்டு இலங்கையில் தனது மேம்பட்ட நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, மாணவர் விசா மூலம் ஜப்பான் சென்றுள்ளார்.

ஜப்பானில் இறங்கிய, அவர் அங்கு தன்னுடைய உயர்கல்வியை துவங்குவதற்கு முன்பு நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பியுள்ளார்.

பல கனவுகளுடன் ஜப்பானுக்கு சென்ற இலங்கை பெண்ணின் கொடூர மரணம்! நடந்தது என்ன? வெளிவரும் பல அதிர்ச்சி உண்மைகள் | Sri Lankan Woman Die In Japanese Detention Centres

ஆனால், ஜப்பானில் மாணவர் விசாவில் உள்ளவர்கள், வாரத்திற்கு 28 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும். அவர்களுக்கு நிரந்தர வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினம் என்பதை அவர் அங்கு சென்ற பின்னரே உணர்ந்து கொண்டார்.

இதையடுத்து இவர் அங்கிருகும் கல்வி நிறுவனம் ஒன்றில், ஜப்பானிய மொழியை படிக்க துவங்கியுள்ளார். ஆனால், அதற்கான கல்விக் கட்டணத்தை அவரால் செலுத்த முடியவில்லை,

பல கஷ்டங்களை எதிர் கொண்டார். நினைத்தது போன்று நல்ல வேலை கிடைக்காமலும், கல்விகட்டணத்தையும் செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்த போது, இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இளைஞர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், பொலிசார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், Sandamali விசாவுடன் அதிக காலம் இங்கு தங்கிவிட்டதாக கூறி, அவரை கைது செய்து, அங்கிருக்கும் Nagoya தடுப்பு முகாமில் சிறையில் அடைத்தனர்.

இதனால், அவர் இலங்கைக்கு திரும்புவதற்கு பணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை ஒரு குற்றவாளி போல் சிறிய அறையில் அடைத்து, ஏழு மாதங்கள் மிருகத்தை விட மிகவும் மோசமாக நடத்தி வந்துள்ளனர்.

இந்த கடினமான சூழ்நிலையில், தனக்கு குடியேற்ற அதிகாரிகள் தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் என்று Sandamali எதிர்பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இது குறித்து START அதிகாரி, Yasunori Matsui கூறுகையில், Sandamali கடந்த டிசம்பரில் கடுமையான நோய்வாய்ப்பட்டு, இரத்த வாந்தி எடுத்தார். இதன் காரணமாக, அவரால்  ஜனவரி மாதத்திற்குள்  நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது.

சுமார் 20 கிலோ எடையை இழந்த அவரால் நடக்க முடியாததால், ஒரு சக்கர நாற்காலியால் வைத்து அழைத்து செல்லும் அளவிற்கு மிகவும் பலவீனமாக இருந்தார். இலங்கைக்கு கூட திரும்ப முடியாத நிலையில் இருந்தார்.

குடியேற்ற அதிகாரிகள் அவருக்கு அகதி அந்தஸ்துக்கான அவரது விண்ணப்பத்தை நிராகரித்தனர். மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக அவருக்கு தற்காலிக சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற ஜப்பானிய உதவி வழங்குநர்களின் கோரிக்கைகளையும் புறக்கணித்ததாக குறிப்பிட்டார்.

START என்பது வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அகதிகளுக்கு உதவி வழங்கும் ஒரு ஆதரவு குழு ஆகும்.

பல கனவுகளுடன் ஜப்பானுக்கு சென்ற இலங்கை பெண்ணின் கொடூர மரணம்! நடந்தது என்ன? வெளிவரும் பல அதிர்ச்சி உண்மைகள் | Sri Lankan Woman Die In Japanese Detention Centres

Sandamali-யின் சகோதரி Ridma Ratnayake கடந்த வாரம் டோக்கியோவிலிருக்கும், World Socialist Web Site-ற்கு  பேசியுள்ளார். அப்போது, அவர் கடந்த மே 16-ஆம் திகதி தன்னுடைய சகோதரியின் உடல் தகனம் செய்யப்பட்ட போது, 200-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பிரஜைகள் இருந்ததாகவும், அதே போன்று மே 29-ஆம் திகதி நடந்த நினைவு விழாவில் 400 பேர் கலந்து கொண்டதாகவும் கூறிய அவர், மிகவும் வேதனையுடன், ஜப்பானிய அரசாங்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

என் சகோதரிக்கு, அதிக அளவு வலி நிவாரணி மருந்துகள் மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளதால், அவளால் எதையும் விழுங்க கூட முடியவில்லை. அவள் வாழ்க்கையின் கடைசி சில நாட்களில் மிகவும் கொடுமையை அனுபவித்துள்ளார்.

அவள் உடல் ஒரு வயதான பெண்ணின் உடல் போன்று இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

பல கனவுகளுடன் ஜப்பானுக்கு சென்ற இலங்கை பெண்ணின் கொடூர மரணம்! நடந்தது என்ன? வெளிவரும் பல அதிர்ச்சி உண்மைகள் | Sri Lankan Woman Die In Japanese Detention Centres

மேலும், Sandamal-யின் தாயார் , என் மகள் ஒரு மிருகத்தை போலவே நடத்தப்பட்டுள்ளாள். மிருகத்தைக் கூட, கொஞ்சம் சிறப்பாக கவனிப்பார்கள். ஆனால், அவளை அந்தளவிற்கு கூட பார்க்கவில்லை என்று கண்கலங்கியுள்ளார்.

Sandamali உறவினர்கள் ஜப்பானிய நீதி அமைச்சர் Yoko Kamikawa -வை தொடர்பு கொண்டு, Sandamali மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விளக்கி, காவலில் வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால், இது மாநிலத்தின் பாதுகாப்பை பாதிக்கும் என்று மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் ஜப்பானில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் Sandamali 18-வது நபர். இவர் கடந்த 13 மாதங்களாக அங்கிருக்கும் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டு உயிரிழந்தவர்களில், Sandamali நான்கவது நபராக உள்ளார். இதற்கு முன்னர் இது போன்று மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஜப்பானில் புலம் பெயர்ந்தோர் தடுப்பு மையம் எந்த நிலையில் இருக்கிறது, என்பதை அறிய முடிகிறது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சும் டோக்கியோவில் உள்ள அதன் தூதரகமும் Sandamali உயிரைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை, அவர் எப்படி? ஏன் இறந்தார்? என்பதை ஜப்பானிய அரசாங்கம் விளக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு...

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US