கனடாவில் விபத்தில் பலியான இளைஞருக்கு இலங்கையிலிருந்து கண்ணீர் அஞ்சலி: நெகிழும் தந்தை
கனடாவில் விபத்து ஒன்றில் பலியான இளைஞர் ஒருவருக்கு இலங்கையிலிருந்து வரை மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதாக நெகிழ்ந்துள்ளார் அவரது தந்தை. Esgenoôpetitj என்ற இடத்தில் வாழும் Neil Linklater (19) என்ற இளைஞர், நெடுஞ்சாலை விபத்து ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பலியானார்.
அந்த நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட பகுதி மிகவும் குறுகியதாக உள்ளதாக ஏற்கனவே பலர் புகாரளித்துள்ளார்கள். அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அப்பகுதியில் நிகழ்ந்த விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை மூன்று, அவர்களில் Neilம் ஒருவர்.
ஹாக்கி வீரரான Neil தன் வீட்டுக்கருகிலேயே விபத்தில் பலியான விடயம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது தந்தையான David Linklater Sr, தனது மகன் எல்லாராலும் நேசிக்கப்பட்டதாகவும்,எல்லாரையும் நேசிப்பவராகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் Neilக்கு செலுத்தப்படும் அஞ்சலி பிரமிக்கத்தக்கதாக உள்ளதாக தெரிவித்துள்ள David, இலங்கையிலிருந்து கூட அவருக்கு இரங்கல் செய்திகள் வந்துள்ளதாக நெகிழ்கிறார்.
இலங்கையிலிருந்தும் பலர் Neilக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதோடு, அவருடனான நினைவலைகளை பகிர்ந்துகொண்டுள்ளதாக David நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பலர் Neilக்காக அழுததாக தெரிவிக்கிறார் David. Neilக்கு உலகெங்கிலுமிருந்து இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.