பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் இலங்கை மக்கள்: வீதியில் போராட அழைக்கும் தமிழ் எம்.பி
இலங்கை அரசின் தவறான பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் போராட முன்வர வேண்டுமென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், அத்தியாவசிய பொருள்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இலங்கையிலிருந்து பிழைப்புக்காக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பல்வேறு மக்கள் செல்கின்றனர்.
இதனால், இலங்கை அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து மக்கள் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
இலங்கை எம்.பி
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இலங்கை தமிழ் எம்.பி எம்.ஏ.சுமந்திரன், "சட்டக் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் ஒன்று திரளவும், ஆர்ப்பாட்டங்கள் மூலம் தனிநபர்கள் அதிருப்தியை காட்டவும் தயாராக இருக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் மக்களை மண்டியிட வைத்துள்ளதால், போராட்டத்தை அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். இது சட்டத்தை மீறியதாக இருந்தாலும் நமது குறைகளை வெளிப்படுத்த வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |