வரும் 26ம் தேதி விண்ணில் பாய உள்ள எல்.வி.எம்-3 ராக்கெட்.. - வெளியான முக்கிய தகவல்
வரும் 26ம் தேதி விண்ணில் எல்.வி.எம்-3 ராக்கெட் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோ
சமீபத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) CE-20 கிரையோஜெனிக் இன்ஜினின் விமான ஏற்பு வெப்ப சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
இதனையடுத்து இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவிவிட்டு வருகின்றது.
எல்.வி.எம்-3 ராக்கெட்
இந்நிலையில், மிக அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட்டான 'எல்.வி.எம்.எம்-3' ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது.
இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது. இந்த ராக்கெட்டை வரும் 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
இதற்காக ராக்கெட்டில் ஒன்வெப் இந்தியா-2-க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் வெள்ளி (வீனஸ்) கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டுபிடிக்க ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன்னாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
LVM3-M3/OneWeb India-2 mission is scheduled to launch on March 26, 2023, at 0900 hours IST from the second launch pad at SDSC-SHAR, Sriharikota: ISRO pic.twitter.com/61DGYEOts9
— ANI (@ANI) March 20, 2023