அடித்து நொறுக்கிய இலங்கை வீரர்கள்! ஆப்கானுக்கு தரமான பதிலடி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 323 ஓட்டங்கள் குவித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி
ஹம்பன்டோடவில் இன்று தொடங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.
பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்னே இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிசங்கா 43 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், கருணாரத்னே 52 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ், சமரவிக்ரமாவுடன் இணைந்து நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர்களின் ஆட்டத்தின் மூலம் இலங்கையின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. சமரவிக்ரமா 44 ஓட்டங்களில் இருந்தபோது முஜீப் ரஹ்மான் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
பின்னர் வந்த அசலங்கா 6 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். குசால் மெண்டிஸ் அரைசதம் அணியின் ஸ்கோர் 254 ஓட்டங்களாக இருக்கும்போது, குசால் மெண்டிஸ் 78 (75) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவரது ஸ்கோரில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். தனஞ்செய டி சில்வா பொறுமையாக ஓட்டங்களை எடுக்க, கேப்டன் ஷனகா அதிரடியாக 13 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஹசரங்கா அதிரடி ஆட்டம்
ருத்ர தாண்டவம் ஆடிய வணிந்து ஹசரங்கா 12 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் விளாசினார்.
தனஞ்செய டி சில்வா 24 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 323 ஓட்டங்கள் குவித்தது.
ஆப்கானிஸ்தானின் பாரீத் அகமது மற்றும் நபி தலா 2 விக்கெட்டுகளும், முஜீப் ரஹ்மான், நூர் அகமது தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.