இந்தியாவிடம் நாங்க தோற்க இவர் ஒருவரே காரணம்! தோல்விக்கு பின் பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா கூறியுள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
தோல்வியின் விளிம்பில் இருந்த இந்தியாவை, தீபக் சஹார் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 82 பந்தில் 69 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தார்.
இந்நிலையில், இந்த தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா கூறுகையில், இந்த போட்டியில் எங்களது அணி வீரர்கள் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
Will never forget this moment #teamindia #dream . Thank you so much for your wishes means a lot ☺️? #keepsupporting pic.twitter.com/y0iGLAaaKY
— Deepak chahar ?? (@deepak_chahar9) July 21, 2021
இந்த போட்டி உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி எங்களிடமிருந்து இந்த எளிதான வெற்றியை பறித்தது தீபக் சாஹர் மட்டுமே, அவர் தான் எங்கள் வெற்றியை பறித்துவிட்டார் என்று கூறுவேன்.
அவர் இந்த போட்டியை எங்களிடம் இருந்து அப்படியே கொண்டு சென்றுவிட்டார். நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக தொடங்கியிருந்தாலும் இடையில் நிறைய விக்கட்டுகளை விட்டுவிட்டோம். பேட்டிங் பவர் பிளே வில் இன்னும் நாங்கள் சற்று சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் உள்ளது என கூறியுள்ளார்.