தோல்வியை நோக்கி இலங்கை... சொந்த மண்ணில் கதற விடும் தென் ஆப்பிரிக்கா! டிம்யுத் கருணரத்னே சதம் வீண்

South Africa Sri Lanka Test SL vs SA
By Balakumar Jan 05, 2021 05:09 PM GMT
Report

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

டிம்யுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 3-ஆம் திகதி நடைபெற்றது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

அணியின் தலைவரான டிம்யுத் கருணரத்னே 2 ஓட்டங்கள், லகிரு திரிமன்னே 17 ஓட்டங்கள், வானிண்டு ஹசிரங்கா 29 ஓட்டங்கள், டுஸ்மந்த் சமீரா 22 ஓட்டங்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்கள் கூட தாண்டாததால், இலங்கை அணி இறுதியாக 157 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் துவக்க வீரர் டியான் எல்கர் 127 ஓட்டங்களும், அதன் பின் Rassie van der Dussen 67 ஓட்டங்களும் குவிக்க, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 302 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

145 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் டிம்யுத் கருணரத்னே சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்த போதிலும் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால், டிம்யுத் கருணரத்னே தனி ஒருவனாக தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை சமாளித்து வந்தார்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா மண்ணில் சதம் அடித்த அவர் 103 ஓட்டங்களில் வெளியேற இலங்கை அணி இறுதியாக 211 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணியில் டிம்யுத் கருணரத்னே(102). லகிரு திரிமண்ணே(31), நிரோஷன் டிக்வெல்லா(36), வகிண்டு ஹசரங்கா(16) என எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

அதன் பின் 67 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. இது மூன்றாம் நாள் ஆட்டம், இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால் தென் ஆப்பிரிக்கா அணி நிச்சயம் வெற்றி பெற்று வரும்.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 0-2 என்று இழக்கும்.  

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US