ஒலிம்பிக் வரலாற்றிலே இலங்கை இதுவரை எத்தனை பதக்கங்கள் வென்றுள்ளது தெரியுமா?
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில், இலங்கை வீரர்கள் பெரிய அளவில் பதக்கம் வெல்லாத நிலையில், நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச உலகின் தலைசிறந்த விளையாட்டு நிகழ்வில் பதக்கங்களை வெல்ல அரசாங்கம் நீண்ட கால திட்டத்தை உருவாக்கி வருவதாக கூறியுள்ளார்.
உலகமே எதிர்பார்த்த ஒலிம்பிக் போட்டி, ஜப்பானின் டோக்கியோவில் இந்த கொரோனா பரவலுக்கிடையே கோலகலமாக துவங்கியது.
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் மற்று நாடுகளைப் போன்றே இலங்கையில் இருந்து வீரர்கள் சென்றிருந்தனர்.
ஆனால் தற்போது வரை இலங்கை ஒரு பதக்கத்தை கூட வெல்லவில்லை. இந்நிலையில், இது குறித்து கடந்த வியாழக்கிழமை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.
அப்பொது அவர், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை மற்றும் பளு தூக்குதல் ஆகிய சாத்தியமான ஒலிம்பிக் வெற்றியாளர்களாக இலங்கை அடையாளம் கண்டுள்ளது . அதுமட்டுமின்றி உலகின் தலைசிறந்த விளையாட்டு நிகழ்வில் பதக்கங்களை வெல்ல அரசாங்கம் நீண்ட கால திட்டத்தை உருவாக்கி வருவதாக கூறியுள்ளார்.
மேலும், இந்த 125 வருட ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கை இரண்டே இரண்டு பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.
கடந்த 1948-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், ஆண்களுக்கான 400 மீற்றர் தடகள ஓட்டப்பந்தியத்தில் Duncan White வெள்ளி பத்தக்கத்தையும், அதே போன்று கடந்த 2000-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில், Susanthika Jayasinghe வெண்கலபதக்கமும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.