இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் புதிய சாதனை: 3,625 மில்லியன் மாத்திரைகள் உற்பத்தி
2025ம் ஆண்டில் அதிகப்படியான மருந்து உற்பத்தியை செய்து இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் சாதனை படைத்து இருப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கூட்டுத்தாபனம் கிட்டத்தட்ட 3,625 மில்லியன் மாத்திரைகளை உற்பத்தி செய்து இருப்பதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்தில் அதிகபட்சமாக மேற்கொள்ளப்படும் மாத்திரை உற்பத்தியை மார்ச் மாதத்திலேயே அடைந்து விட்டதாகவும், மார்ச் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 385 மில்லியன் மாத்திரைகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவுகளை நிறைவு
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், வரலாற்றில் முதல் முறையாக மருந்து வழங்கல் பிரிவினரால் வழங்கப்பட்ட முன்பதிவு இலக்குகளை எந்தவொரு தட்டுப்பாடும் இல்லாமல் இந்த ஆண்டு செய்து முடித்துள்ளது.
அத்துடன் புதிதாக 5 மாத்திரைகளை சந்தைப்படுத்தவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாத்திரை உற்பத்தி சாதனையால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு மொத்த வருமானமாக 27.06 பில்லியன் ரூபாய் பதிவாகி இருப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |