இலங்கை, அயர்லாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி: இலங்கை அணி அபார வெற்றி
இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இரட்டை சதம் விளாசிய வீரர்கள்
இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள அயர்லாந்து அணி, இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த
ஏப்ரல் 24ஆம் திகதி தொடங்கியது.
@twitter
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 492 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
@AFP/ISHARA S. KODIKARA
இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்தது. நிஷன் மதுஷ்கா மற்றும் குஷல் மெண்டீஸ் ஆகியோர் இரட்டை சதம் அடித்து அசத்தினர்.
அபார இலக்கு
4ஆவது நாள் இறுதியில் அதிரடியாக ஆடிய இலங்கை அணி 704 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் கருணரத்னே சதமடித்து ஆட்டமிழந்தார்.
மேலும் அதிரடியாக ஆடிய மேதிஸ் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார், 704 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி நான்காம் நாள் முடிவில் டிக்ளர் ஆனது.
@jagran.com
212 ஓட்டங்கள் முன்னிலையிலிருந்த இலங்கைக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில், களமிறங்கிய அயர்லாந்து அணி இலங்கையின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் திணறியது.
Sri Lanka marks historic 100th Test Win with a dominant innings and 10-run triumph over Ireland! ??
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 28, 2023
Scorecard: https://t.co/zsTvl4frlY #SLvIRE #LionsRoar pic.twitter.com/q7pDrfhq2P
தொடக்கத்திலே விக்கெட்டுகள் விழுக ஒரு கட்டத்தில், ஒன்று அயர்லாந்து போட்டியை சமன் செய்ய வேண்டும் அல்லது இலங்கை ஜெயிக்க வேண்டும் என்ற நிலை உண்டானது.
ஆட்டநாயகன் ஜெயசூர்யா
இந்த நிலையில் 200 ஓட்டங்கள் அடித்திருந்த அயர்லாந்து அணி, மொத்த விக்கெட்டுகளையும் இழந்து இலங்கையிடம் தோல்வியடைந்தது. சிறப்பாக பந்து வீசிய ரமேஷ் மெண்டீஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Prabath Jayasuriya storms into the record books as the quickest ?️? Spinner and the quickest Sri Lankan to reach 50 Test wickets,? joining the ranks of the second-fastest players in Test cricket history! ??
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 28, 2023
Jayasuriya hit the 50-wicket mark in just his seventh Test to snatch… pic.twitter.com/Jq6Ia2mZV0
இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியின் ஜெய சூர்யா ஆட்ட நாயகன் விருதையும், குசல் மெண்டீஸ் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.