கோட்டாபய அரசுக்கு எதிராக உடல் நடுநடுங்க போராடிய இளைஞர்! வைரலாகும் காணொளி
இலங்கையில் கொட்டும் மழையில் இளைஞர் ஒருவர் உடல் நடுநடுங்க அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணொளி இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதையடுத்து, மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே நேற்று இலங்கையில் இளைஞர் ஒருவர் பலத்த மழையில் உடல் நடுநடுங்க கையில் பதாகையுடன் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கொட்டும் மழையில் நடுநடுங்க நாட்டிற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞரை இலங்கையர்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இலங்கை மக்களின் இன்றைய மனநிலையின் வெளிப்பாடு இந்த இளைஞரின் இந்த போராட்டம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரியாணியால் கோடிகளில் கொட்டும் பணம்! ஆச்சரியப்படுத்தும் 27 வயது இளம்பெண்
State of the people of #lka pic.twitter.com/0iLtSLM8pT
— catharsis ?? (@4shade17) April 5, 2022
இந்நிலைியல், இன்று நாடாளுமன்றத்தில் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜான்சன்ஸ்டன் பெர்னாண்டோ, எந்த சூழ்நிலையில் அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய விலக மாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்வரும் நாட்களில் இலங்கையில் நிலைமை எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.