வெளிநாட்டில் இலங்கையருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! வெளியான புகைப்படம்
துபாய் Duty Free draw லொட்டரியில் இந்தியர் மற்றும் இலங்கையர் பெரிய பரிசை தட்டி சென்றுள்ளனர்.
இந்தியருக்கு அதிர்ஷ்டம்
இந்தியாவின் பெங்களூரை சேர்ந்தவர் அமித் சரப். இவர் எமிரேட்ஸில் ஓன்லைன் டிரேடிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அமித்துக்கு ஏற்கனவே முன்னர் Duty Free draw-வில் $1 மில்லியன் பரிசு விழுந்தது.
இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் பரிசு கிடைத்துள்ளது. அதன்படி டிக்கெட் நம்பர் 0115க்கு Mercedes Benz S500 காரை பரிசாக அமித் வென்றுள்ளார்.
DDF
இலங்கையருக்கு அதிர்ஷ்டம்
அமித் கூறுகையில், கடந்த 2016ல் இருந்து டிராவில் தவறாமல் பங்கேற்கிறேன். இரண்டு முறை அதிர்ஷ்டம் அடித்துள்ளது, துபாய் டூட்டி ஃப்ரீக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் காலியை சேர்ந்த Yasas Nalin Pathirana, BMW R 9T Pure பைக்கை Duty Free drawவில் பரிசாக தட்டி சென்றுள்ளார்.