இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி
கனடாவில் ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் உயிரிழந்த நிலையில் அவர் குறித்து மனைவி உருக்கமாக பேசியுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Burnabyயில் வாழ்ந்து வந்தவர் Bakir Junaideen (57). இலங்கையிலிருந்து இவர் கனடாவிற்கு குடியேறியிருக்கிறார். சமீபத்தில் பொழுதுபோக்கு பூங்காவில் Junaideenம் அவரது இளைய மகனான Zaid (9)ம் தங்கள் நண்பர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் பயணித்திருக்கிறார்கள்.
அப்போது படகு கவிழ்ந்த நிலையில் தண்ணீரில் விழுந்த மகனை காப்பாற்றும் முயற்சியில் Junaideen உயிரிழந்தார். அந்த இடத்தில் இருந்தவர்கள் Zaid-ஐ காப்பாற்றியுள்ளனர். தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட Junaideen மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
canadatoday
அவரின் மரணம் குடும்பத்தார் மற்றும் நண்பர்களை உலுக்கியுள்ளது. Junaideen-க்கும் Farzana Abubakker என்ற பெண்ணிற்கும் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் திருமணம் நடந்தது.
இதன்பின்னரே அவர்கள் கனடாவிற்கு வந்தனர். Farzana கூறுகையில், அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார், எனக்கானவராக இருந்தார். எனது கணவரைத் திருப்பிக் கொடுங்கள் ஏனென்றால் என் பிள்ளைகளுக்கு அவர் தேவை என சம்பவத்திற்கு பிறகு கடவுளிடம் வேண்டி கொண்டேன்.
Junaideen உயிருக்கு போராடும் போது நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைக்கு வந்து அவரைப் பார்த்தார்கள். அவர் நேர்மையானவராகவும், மென்மையாக பேசுபவராகவும் திகழ்ந்தார்.
அவர் இறந்த விதத்தில் மட்டும் ஒரு ஹீரோ மட்டுமல்ல, அவர் வாழ்ந்த விதத்திலும் ஹீரோ தான் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.
ctvnews