வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையருக்கு அடித்த உச்சக்கட்ட அதிர்ஷ்டம்! கைக்கு வந்த பல கோடிகள்... புகைப்படம்
துபாயில் நடக்கும் Mahzooz லொட்டரி டிராவில் இலங்கையர், இந்தியர் உள்ளிட்டோருக்கு கோடிகளில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
இதில் வெற்றி பெற்றவர்கள் பலரும் பரிசு பணத்தில் புதிய வீடு கட்டுவேன் எனவும், குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன் எனவும் தெரிவித்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 6 பேருக்கு Dh377,777.75 பரிசு விழுந்துள்ளது. இதில் மார்க் ஆண்டணி என்பவர் மட்டும் Dh100,000 பரிசை அள்ளி சென்றார்.
அவர் கூறுகையில், அதிர்ஷ்ட டிரா நடந்த இரவில் சக ஊழியர் எனக்கு போன் செய்தார், ஆனால் என்னால் அதை எடுக்க முடியவில்லை. பின்னர் எனக்கு அவர் அனுப்பிய மெசேஜில் பரிசு விழுந்தது பற்றி தெரிவித்திருந்தார்.
ஓடி தப்பிப்பதை தவிர ரஷ்ய படையினருக்கு வேறு வழியில்லை! கெத்து காட்டும் உக்ரைன்
இதையடுத்து உடனடியாக செல்போனில் Mahzooz செயலி மூலம் அதை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றேன். வெற்றியாளர்கள் பெயரில் என் பெயர் இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அது ஒரு விவரிக்க முடியாத தருணம் என கூறியுள்ளார். இந்த டிராவில் இரண்டாவது மிகப்பெரிய பரிசான Dh2 மில்லியனை இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் தட்டி சென்றுள்ளனர்.
பரிசு பணத்தை அவர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.