அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த....51 இலங்கை அகதிகள்: கடற்படை அதிகாரிகள் அதிரடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அவுஸ்திரேலியா நாட்டிற்கு அகதிகளாக செல்ல முயற்சித்த 51 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, தீவு நாடான இலங்கையில் வெளிநாட்டுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத இலங்கை மக்கள், கடல் வழியாக ஆவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஆவுஸ்திரேலியாவிற்கு செல்லும் நான்கு அகதிகள் குழுவை இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜூன் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் மட்டும் 100 பேர் வரை சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கிழக்கு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 51 பேரை ஏற்றிச் சென்ற உள்ளூர் மீன்பிடி இழுவை படகை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: கொடிகளை பறக்கவிட்ட ஆக்கிரமிப்பாளர்கள்: உக்ரைனின் மூலோபாய நகரை கைப்பற்றிய ரஷ்யா
இதுத் தொடர்பாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ள அறிக்கையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே நாட்டு மக்கள் வெளியேற முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.