பல மீற்றர் தூரம் பறந்த ஈட்டி! இலங்கை வீரர் தினேஷ் பரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அற்புத தருணம்... புல்லரிக்கும் வீடியோ காட்சி
பரா ஒலிம்பிக்கில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் தங்கம் வென்ற தருணத்துக்கு காரணமான புல்லரிக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட நிலையில் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனையை படைத்துள்ளார்.
இதன் மூலம் தங்கமும் வென்று வியக்க வைத்துள்ளார். இந்த நிலையில் தினேஷ் பரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல காரணமாக அமைந்த அவர் ஈட்டியை எறிந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவானது பரா ஒலிம்பிக் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையில் சாதனை மன்னன் தினேஷுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் நமலில் டுவிட்டர் பதிவில், 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் வரலாறு படைத்த தினேஷ் பிரியந்தவுக்கு வாழ்த்துக்கள்! அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் பெருமையான தருணம் என குறிப்பிட்டுள்ளார்.
Now that's how to win a #Paralympics #Gold !
— Paralympic Games (@Paralympics) August 30, 2021
Dinesh Priyan Herath Mudiyanselage #SRI smashes the world record by nearly 4m in the men's F46 javelin? #ParaAthletics #Tokyo2020 #Paralympics pic.twitter.com/3ZZ9UC6EJA