தமிழகத்தில் ஈழத்து தமிழ் சிறுமியின் சாதனை! குவியும் பாராட்டுகள்
இந்தியாவில் தற்போது பேசு பொருளாக மாறிவருவது பிளஸ் 2 தேர்வு தான். அதில் நந்தினி எனும் மாணவி 600 இற்கு 600 எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் மதுரையை வாழ்விடமாகக்கொண்ட இலங்கை புலம்பெயர் பெற்றோர்களின் மகளான ரித்துஷா 591 மதிப்பெண் எடுத்து மதுரை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இந்த செய்தியை அறிந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
மாணவி ரித்துஷா
இலங்கையை சேர்ந்த மாணவி ரித்துஷாவின் பெற்றோர்கள் கடந்த 33 வருடங்களாக இந்தியாவில் மதுரை மாவட்டம் ஆணையூரில் உள்ள ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகின்றார்.
இவர் தனது பள்ளியை மதுரை கூடல்நகரில் உள்ள புனித அந்தோணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். அந்த பாடசாலையில் படித்து மதுரை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
ரித்துஷாவின் மதிப்பெண்கள்
இவர் தமிழ் பாடத்தில் 97 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்ணும், பொருளாதாரத்தில் 99 மதிப்பெண்ணும், வணிகவியலில் 99 மதிப்பெண்ணும், கணக்கு பதிவியலில் 100 மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 100 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார்.
மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்துக்கொண்டிருந்த மாணவிக்கு நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், அவர்கள் வேறு நாட்டை சேர்ந்தவர்கள். ஆகயைால் அவரால் நீட் தேர்வு எழுத முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
இதனையடுத்து CA படிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அதையும் வீட்டின் சூழ்நிலை காரணமாக Online மூலம் கற்றுக்கொள்ள நினைத்துள்ளார் மாணவி ரித்துஷா.
இதை அறிந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ரித்துஷாவின் பெற்றோரை அழைத்து அவரை நன்றாக படிக்க வைக்க வேண்டும் கூறியுள்ளார். தனது காரிலேயே அழைத்துச்சென்று மாணவிக்கு B.COM அனுமதி சீட் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Born & raised in a Sri Lankan refugee habitation
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 30, 2023
Excellent student
Advised against medicine
Chose Commerce
Scored 591/600
Poor advice (online degree & CA)
We had a 30 min talk
Admitted to LDC (B. Com) & Fees Paid
Aspires to be IIM MBA
Sometimes all it takes is a spark
😊 pic.twitter.com/FoAh7eCKOq