சொற்ப பணத்துடன் வேறு நாட்டுக்கு குடிபெயர்ந்த இலங்கை குடும்பம்! இன்று பல கோடிகளுக்கு அதிபதியான பெண்
இலங்கையை பூர்வீகமாக கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு குறைந்த அளவு பணத்துடன் வந்து ஒரு குடும்பம் குடியேறிய நிலையில், அக்குடும்பத்தை சேர்ந்த பெண் தற்போது நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் CEO-வாக உயர்ந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் Macquarie Group நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) Shemara Wikramanayake. இவர் கடந்த 2021ஆம் ஆண்டில் $16.39 மில்லியன் சம்பாதித்துள்ளார் என வங்கியின் சமீபத்திய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
Shemara தனது 14 வயதில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். அப்போது அவர்களிடம் பணமாக வெறும் $200 மட்டுமே இருந்தது. இப்போது வாரத்திற்கு மட்டும் $315,000 வருமானம் பெறும் அளவுக்கு உச்சம் தொட்டுள்ளார் Shemara.
நாட்டின் 'மில்லியனர் ஃபேக்டரி' என்று அழைக்கப்படும் Macquarie Group நிறுவனம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் $1.3 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது, இதன் பின்னணியில் தூணாக இருந்தவர் Shemara தான்.
கடந்த 2019ஆம் ஆண்டில் 60 வயதான Shemara அவுஸ்திரேலியாவின் அதிக வருமானம் ஈட்டும் CEO ஆன முதல் பெண்மணி என்ற பெயரை பெற்றார். கடந்த 70களில் அவுஸ்திரேலியாவுக்கு வந்த Shemara கல்வியில் சிறப்பாக விளங்கி பின்னாளில் சட்டத்தரணி மற்றும் வங்கியாளராக உயர்ந்தார்.
இதே போல கடந்த 2019ல் அவர் $18 மில்லியன் சம்பளம் பெற்றிருக்கிறார். Shemaraவின் தந்தையான ரஞ்சி முன்னர் அளித்திருந்த ஒரு பேட்டியில், எங்கள் குடும்பம் இலங்கையில் வளர்ந்து மனம் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்தது.
ஆனால் கடினமான சூழல் காரணமாக கடந்த 1975ல் அவுஸ்திரேலியாவில் குடியேறினோம் என கூறியிருந்தார். ரஞ்சி கடந்த 1958 இல் மருத்துவப் பட்டம் பெற்றார் மற்றும் அதே ஆண்டில் மேலதிக பயிற்சிக்காக தனது மனைவி அமராவுடன் லண்டன் சென்றார்.
இதையடுத்து இளம் தம்பதியினர் பிரித்தானியாவிலேயே குடியேறினர். அவர்களுக்கு 1960 இல் ரோஷனா என்ற மகள் பிறந்தார். அடுத்த ஆண்டில் Shemara இரண்டாவது மகளாக பிறந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் பிரித்தானியாவில் இருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவுக்கு குடியேற முடிவு செய்த குடும்பம் கடந்த 1975ல் அங்கு வந்து குடியேறியுள்ளனர்.