சிட்னி நகரத்தில் மீண்டும் கத்திக்குத்து தாக்குதல்., தேவாலயத்தில் நடந்த அசம்பாவிதம்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் மீண்டும் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது.
சிட்னியில் (Sydney) இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாக்லியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பாதிரியார் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை மாலை தேவாலயத்தில் ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இளைஞர் ஒருவர் திடீரென பாதிரியாரை நோக்கி வேகமாக சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஆராதனையின் போது, கத்தியுடன் முன்னோக்கிச் சென்ற ஆசாமி, பாதிரியாரை முகம் கழுத்து என கண்டபடி குத்தினார்.
அப்போது மாஸ் நேரலையில் இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்ட காணொளி வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில் தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தினங்களுக்கு முன்னதாக, இதே சிட்னி நகரத்தில் மால் ஒன்றில், இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்திய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்த நிலையில், இப்போது தேவாலயத்தில் நடந்த இந்தத் தாக்குதல் மக்களை பீதியடையச் செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sydney, Australia, Sydney stabbing at church