ஜப்பானில் தொழிற்சாலைக்குள் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: ஊழியர்கள் 15 பேர் பாதிப்பு
ஜப்பானில் தொழிற்சாலைக்குள் புகுந்து நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
தொழிற்சாலையில் கத்திக்குத்து
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மிஷிமா நகரில் வாகன டயர் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.
100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை பணிபுரிந்து வந்த தொழிலாளர் ஒருவர் தொழிற்சாலைக்குள் திடீரென கத்திக்குத்து தாக்குதலில் இறங்கினார்.

இதனால் அங்கு வேலை பார்த்து வந்த சக ஊழியர்கள் பலர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துக்கு பிறகு கிடைத்த தகவலின் படி, கிட்டத்தட்ட 15 ஊழியர்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் தாக்குதல் நடத்திய ஊழியரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |