பிரித்தானியாவில் பட்டபகலில் கத்திக்குத்து: ஆயுதம் ஏந்திய பொலிஸார் குவிப்பு
பர்மிங்காம் ஆலம் ராக் பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் கத்திக்குத்து
பிரித்தானியாவின் பர்மிங்காம் ஆலம் ராக் பகுதியில்(Alum Rock) பகல் நேரத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயம் அடைந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் பெண் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த துப்பாக்கி ஏந்திய சிறப்புப் படை பொலிஸார், பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.

அருகில் இருந்த குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தை உடனடியாக மூடினர்.
மேலும் இதில் சம்பந்தப்பட்ட 32 வயதுடைய நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும், இது தனிப்பட்ட தாக்குதல் சம்பவம் என்றும் காவல் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் முன்ரோ கேட்டுக் கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |