லண்டனில் பெண் ஒருவருக்கு கத்திக்குத்து: 30 வயதுடைய இளைஞர் கைது
லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லண்டனில் கத்திக்குத்து
லண்டனின் வடமேற்கில் உள்ள பவுண்ட் லேன்(Pound Lane) வில்லெஸ்டன் பகுதியில் கடந்த சனிக்கிழமை நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு மாலை 4 மணிக்கு அளவில் விரைந்த பொலிஸார் மற்றும் அவசர சேவை அமைப்பினர் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்தனர், இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மெட்ரோ பொலிட்டன் காவல்துறை தீவிர கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சந்தேக நபர் கைது
தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணும், பாதிக்கப்பட்ட நபரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என தெரியவந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வடக்கு லண்டன் காவல் நிலையத்தில் பிடியில் வைக்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |