ட்ரம்பின் வரி விதிப்பால் தாறுமாறாக எகிறும் iPhone விலைகள்: எச்சரிக்கும் நிபுணர்கள்

iPhone Donald Trump China
By Arbin Apr 06, 2025 06:18 AM GMT
Report

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விடுதலை நாள் வரி விதிப்பால் iPhone விலைகள் தாறுமாறாக அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சீனாவில் உற்பத்தி

iPhone-ன் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 டொலரில் இருந்து 850 டொலராக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்ப ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்ரம்பின் வரி விதிப்பால் தாறுமாறாக எகிறும் iPhone விலைகள்: எச்சரிக்கும் நிபுணர்கள் | Staggering Price Of New Iphone

ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனை சீனாவில் உற்பத்தி செய்கிறது. ட்ரம்பின் விடுதலை நாள் வரி விதிப்பு என்பது சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 54 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தயாரிப்பு செலவு அதிகரிப்பை ஈடு செய்ய, ஆப்பிள் நிறுவனம் தங்கள் iPhone விலையை இனி உயர்த்தும். இதனால், 256GB iPhone 16 Pro விலை 1100 டொலரில் இருந்து 3500 டொலர் என தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது.

அமெரிக்காவிற்கான வாகன ஏற்றுமதியை இடைநிறுத்திய பிரித்தானியாவின் Jaguar Land Rover

அமெரிக்காவிற்கான வாகன ஏற்றுமதியை இடைநிறுத்திய பிரித்தானியாவின் Jaguar Land Rover

பத்து மடங்கு உயரும்

வரி விதிப்பு என்பது வெளிநாட்டு பொருட்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாகவே ஜனாதிபதி ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். ஆனால் ஆப்பிள் நிறுவனம் அதன் சாதனங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

ட்ரம்பின் வரி விதிப்பால் தாறுமாறாக எகிறும் iPhone விலைகள்: எச்சரிக்கும் நிபுணர்கள் | Staggering Price Of New Iphone

மட்டுமின்றி, அமெரிக்க மண்ணில் ஐபோன்களை தயாரிப்பதற்கு சிக்கனமான வழி இல்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மேலும் ஐபோன் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவது என்பது சாத்தியப்படாத மிகப்பெரிய முயற்சி என்றே கூறப்படுகிறது.

தற்போது சீனாவில் அசெம்பிளிங் செலவு சுமார் 30 டொலராகும், ஆனால் உற்பத்தி அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டால் இது பத்து மடங்கு உயரும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US