Weight Loss: ஒரு நாளில் எத்தனை படிக்கட்டுகள் ஏறினால் உடல் எடை குறையும்?
தற்போது பெரும்பாலான நபர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
இதற்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள், மன அழுத்தம், மாத்திரைகளின் பக்கவிளைவுகள் என பல காரணங்கள் உண்டு.
எடையை குறைக்க பலரும் ஜிம் செல்வதும், வீட்டிலேயே உடற்பயிற்சிகளை செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
ஆனால் தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினாலே உடல் எடையை குறைக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?
படிக்கட்டுகளில் ஏறுவது உடல் எடையைக் குறைக்கும்
படிக்கட்டுகளில் ஏறுவது எடை இழப்பிற்கு மிகவும் உதவுகிறது.
அதாவது, உடல் எடையை குறைக்க நடைபயிற்சி போன்ற செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது, படிக்கட்டுகளில் ஏறுவது கலோரிகளை விரைவாக குறைக்க உதவுகிறது.
உடல் எடை மற்றும் செயல்பாட்டின் அளவைப் பொறுத்து, படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் நிமிடத்திற்கு சுமார் 8 முதல் 11 கலோரிகள் வரை குறைக்கலாம்.
எனவே, இந்த எளிதான பயிற்சியை தொடர்ந்து செய்வதால் உடல் எடையை விரைவாக குறைக்கலாம்.
உடல் எடையைக் குறைப்பதற்காக வாரத்தில் ஐந்து நாட்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறுவதை வழக்கமாக்கலாம்.
இந்த செயல்பாடை மேற்கொள்வதற்கு முன்னதாக ஒரு சீரான உணவுடன் தொடங்கினால், ஒரு நாளைக்கு 200-300 கலோரிகளை குறைக்கலாம்.
இதனால், வாரத்திற்கு சுமார் 200 கிராம் எடையை குறைய வாய்ப்பிருக்கிறது.
பயிற்சியை எப்படி தொடர்ந்து செய்வது?
முப்பது நிமிடங்கள் தொடர்ந்து ஏறுவது அதிகமாகத் தோன்றினால், அவ்வப்போது ஓய்வெடுத்து இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து செய்யும்பொழுது நாளுக்குநாள் படிக்கட்டு ஏறுவதன் வேகத்தை அதிகரிக்கலாம். இதனால் அதிக கலோரிகளை குறைக்கலாம்.
மேலும், பல இடங்களில் லிப்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக படிக்கட்டுகளை ஏறி இறங்குவதை மேற்கொள்ளவும்.
படிக்கட்டு ஏறுவதால் கிடைக்கும் பிற நன்மைகள்
தினமும் படிக்கட்டுகளை ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல் ஆயுட்காலம் கூட கூடிவிடும் என்று கூறுகின்றனர்.
மேலும், சரியான இதய துடிப்பை பெறவும், ரத்த அழுத்தம், நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு போன்ற வியாதிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
தினமும் படிக்கட்டு ஏறுவது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.
தினமும் படிகளில் 10 முதல் 15 நிமிடம் வரை ஏறி இறங்கினால் உடல் நல்ல தோற்றத்தில் இருக்கும்.
இதனை தொடர்ந்து செய்வது மனதிற்கும் நல்லது. அதேபோல அன்றைய நாள் தூங்குவதற்கும் மிகவும் சௌகரியமாக இருக்கும்.
படி ஏறி இறங்கும் பொழுது மூச்சு வாங்கும், அப்படி மூச்சு வாங்கும் பொழுது உடலுக்கு செல்லக்கூடிய ஆக்சிஜனின் அளவு அதிகரித்து நுரையீரலின் பலமும் கூடுகிறது.
ஆரோக்கியமான எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளை உருவாக்கவும் பராமரிக்கவும் உதவும். மேலும் முதுகுவலி வராமல் தடுக்கும்.
மாதவிடாய் நின்ற பெண்களின் எலும்பு அடர்த்தியையும் மேம்படுத்த உதவுகிறது.
மேலும், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு, உடல் பருமன் மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட நாள்பட்ட நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தை குறைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |