ஸ்டாலின் எனக்கு செய்த துரோகம்! அவர் முதலமைச்சர் ஆக முடியாது: சபதம் எடுத்த மு.க.அழகிரி
தமிழகத்தில் ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சர் ஆக முடியாது என்று மு.க.அழகிரி தெரிவித்திருப்பது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால் கட்சி தலைமை அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் இன்று மதுரையில் ஆலோசனை நடத்தினார்.
ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை - மு.க.அழகிரி#MKAlagiri | #MKStalin pic.twitter.com/RQgaffFhaV
— Thanthi TV (@ThanthiTV) January 3, 2021
அப்போது அவர் பேசிய போது, நான் அப்பா கலைஞர் கருணாநிதி இறந்தவுடன் நீ தான் எல்லாம் என்று ஸ்டாலினிடம் கூறினேன், நான் மட்டுமின்றி என் குடும்பமே கூறினோம்.
ஆனால் அதை எல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை, தென் மண்டலத்தில் யாரையாவது தூக்குவார்கள், யாரையாவது சேர்ப்பார்கள், அதைப் பற்றி எனக்கு தெரியவ தெரியாது, ஸ்டாலின் ஏன் எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்தார் என்பது இதுவரை தெரியவில்லை என்று வேதனையுடன் பேசினார்.
மேலும், அவர் ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் முக ஸ்டாலின் எப்போதுமே முதல்வராக முடியாது.
ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வழங்கப்போகிறேன் என்றார்கள் நான் ஒப்புதல் தந்தேன்.
தம்பிக்கு துணை முதல்வர் பதவி என தந்தை கூறினார். நான் சம்மதித்தேன் உடல் நிலை சரியில்லாத கருணாநிதியை கட்டாயப்படுத்தி திருவாரூரில் போட்டியிட செய்ததாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி நான் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் என்னுடைய ஆதரவாளர்கள் ஆதரவு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார், இதனால் அழகிரி நிச்சயமாக ஸ்டாலினை எதிர்த்து தான் ஒரு முடிவெடுக்கப்போகிறார் என்பது மட்டும் இதில் தெளிவாக தெரிகிறது.