உடல் எடையை குறைக்கும் ஏபிஎஸ் பயிற்சி (abs workout)! 20 நிமிடங்கள் செய்தாலே போதுமாம்
ஏபிஎஸ் பயிற்சி (abs workout)
ஸ்டார் ஏபிஎஸ்யை செய்ய முதலில் தரையில் மல்லாக்க படுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்கள் கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு உங்கள் கால்களையும் கைகளையும் தூக்கி தரையில் இருந்து உடம்பை தூக்கி அப்புறம் பழைய நிலைக்கு சென்று மறுபடியும் தரையில் இருந்து உடம்பை தூக்கி என உங்கள் வயிற்றுப் பகுதி அமுங்கும் படி செய்ய வேண்டும்.
உங்கள் வயிற்றுப்புற மையத்தை இறுக்கி உங்கள் மேல் உடல் மற்றும் கால்கள் இரண்டையும் உயர்த்த முயற்சிக்க வேண்டும்.
உங்கள் கால்கள் மார்புக்கு அருகில் செல்லும் போது முழங்காலை வளைத்து அவற்றை உங்கள் கைகளால் கட்டிப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
அதற்கு பின் உங்கள் கால்கள் மற்றும் கைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் பிடித்து நேராக்க வேண்டும். உங்கள் மேல் மற்றும் கீழ் உடலை உயர்த்துவதை நினைவில் கொள்ளுங்கள்.
அதே மாதிரி உங்கள் கால்களையோ கைகளையோ தரையில் தொட வேண்டியதில்லை. இந்த உடற்பயிற்சி தசையின் சுருக்கத்திற்கு உதவுகிறது.
இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வரும் போது குறைந்த நாட்களில் நீங்கள் நல்ல பலனை பெற முடியும். விரைவில் உங்கள் உடல் எடையை குறைக்க 25 ஸ்டார் ஏபிஎஸ்யை நான்கு செட்டாக செய்து வாருங்கள்.