தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு ரூ.433 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

By Sathya Mar 18, 2025 05:39 AM GMT
Report

தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு 50 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 433.49 கோடி) இழப்பீடாக வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.433.49 கோடி இழப்பீடு

பார்சல் கட்டும் போது செய்த தவறு காரணமாக டெலிவரி ஊழியர் மீது தேநீர் சிந்தியதால், அவருக்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 433.49 கோடி) இழப்பீடு வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு ரூ.433 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு | Starbucks To Pay Rs 433 Cr To Worker Spilling Tea

கடந்த 2020-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் உள்ள ஸ்டார்பக்ஸ் விற்பனையகத்தில், மைக்கேல் கார்சியா என்ற ஊழியர் தேநீர் விநியோகம் செய்யும் பணி செய்து கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் நடைபெற்ற அன்று தேநீர் விநியோகம் செய்ய சென்ற மைக்கேலின் பார்சல் சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது.

நடிகைகளின் இடுப்பை கிள்ளி விஜய் அரசியல் செய்கிறார்: அண்ணாமலை குற்றச்சாட்டு

நடிகைகளின் இடுப்பை கிள்ளி விஜய் அரசியல் செய்கிறார்: அண்ணாமலை குற்றச்சாட்டு

இதனை அறியாத மைக்கேல் அதனை வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்றார். அப்போது, அந்த தேநீர் அவர் மீது சிந்தி இடுப்பின் கீழ் பகுதி, தொடையின் உள்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது.

தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு ரூ.433 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு | Starbucks To Pay Rs 433 Cr To Worker Spilling Tea

பின்னர் தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தை நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்தார். அவரது வழக்கறிஞரான நிக்கோலஸ் ரோவ்லி தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில், "ஸ்டார்பக்சில் வேலை செய்யும் ஊழியர் அலட்சியமாக சூடான பானங்களில் ஒன்றை பாதுகாக்க தவறிவிட்டார்.

இதனால் அந்த பானம் மைக்கேல் மீது சிந்தியுள்ளது. அவருக்கு பலமுறை தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.

மேலும் அவர், ஐந்து ஆண்டுகளாக தீக்காயங்களால் ஏற்பட்ட சிதைவு, வலி, செயலிழப்பு மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுடன் வாழ்ந்து வந்தார்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தரப்பில், "நீதிமன்றம் அறிவித்த தொகை அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும்" தெரிவித்துள்ளது.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US