டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடது கை பந்துவீச்சாளராக ஸ்டார்க் படைத்த சாதனை
mitchell starc becomes first left arm bowler take 450 wickets in test cricket: டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்களை கடந்த முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை மிச்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
மிச்செல் ஸ்டார்க் சாதனை
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.
முதல் 2 நாட்களில் மழை குறுக்கிட்ட நிலையில், 3வது நாளில் முதல் இன்னிங்க்ஸை ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா, 7 விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா அணித்தலைவரான டெம்பா பவுமா, நிதானமாக ஆடி சதமடித்துள்ளார்.
அவுஸ்திரேலியா தரப்பில் 2 விக்கெட்களை கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்களை கடந்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 450 விக்கெட்களை கைப்பற்றிய முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கையின் ரங்கனா ஹெரத் 433 விக்கெட்களுடனும், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 414 விக்கெட்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும், 450 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 4வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார்.
708 விக்கெட்களுடன் ஷேன் வார்ன் முதலிடத்திலும், 573 விக்கெட்களுடன் கிளென் மெக்ராத் 2வது இடத்திலும் மற்றும் 563 விக்கெட்களுடன் நாதன் லயன் 3வது இடத்திலும் உள்ளனர்.