ஸ்டார்க்கின் தாக்குதலில் 27 ரன்னுக்கு மே.தீவுகள் ஆல்அவுட்! 400 விக்கெட்..வரலாற்று சாதனை
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.
ஷாமர் ஜோசப், அல்சரி ஜோசப்
அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஜமைக்காவில் நடந்தது.
Brutal pace from Alzarri sends Webster back!🔥🔥#WIvAUS | #FullAhEnergy pic.twitter.com/iIo6aH2wnt
— Windies Cricket (@windiescricket) July 14, 2025
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, மேற்திந்திய தீவுகள் 143 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலியா 121 ஓட்டங்களுக்கு சுருண்டது. கேமரூன் கிரீன் அதிகபட்சமாக 42 ஓட்டங்கள் எடுத்தார்.
மிரட்டலாக பந்துவீசிய அல்சரி ஜோசப் 5 விக்கெட்டுகளும், ஷாமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது.
𝐌𝐢𝐭𝐜𝐡𝐞𝐥𝐥 𝐒𝐭𝐚𝐫𝐜 𝐞𝐧𝐭𝐞𝐫𝐬 𝐭𝐡𝐞 𝟒𝟎𝟎 𝐜𝐥𝐮𝐛 𝐢𝐧 𝐡𝐢𝐬 𝟏𝟎𝟎𝐭𝐡 𝐓𝐞𝐬𝐭 💥
— FanCode (@FanCode) July 14, 2025
Starc reaches 400 wickets in just 19,062 balls, making him the second-fastest ever behind only Dale Steyn 🐐🔥#WIvAUS pic.twitter.com/geZsDEZghR
தனது புயல்வேகப்பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) மேற்கிந்திய தீவுகளின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
27 ஓட்டங்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள்
மறுபுறம் ஸ்காட் போலண்டும் தாக்குதல் நடத்த, நிலைகுலைந்த மேற்கிந்திய தீவுகள் 27 ஓட்டங்களுக்கு சுருண்டது.
🔥𝐖 𝟎 𝟎 𝟎 𝐖 𝐖🔥
— FanCode (@FanCode) July 14, 2025
First ball – wicket.
Next two – absolute jaffas.
Three wickets. Six balls. Zero runs. 😳
Mitchell Starc turns up the heat in his 100th Test as WI crash to 0/3 chasing 204.#WIvAUS #Starc pic.twitter.com/FvdyNTOC1N
ஜஸ்டின் கிரேவ்ஸ் (11) மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தார். மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளும், ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளும், ஹேசல்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அவுஸ்திரேலிய அணி 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியது.
தனது 100வது டெஸ்டில் விளையாடிய ஸ்டார்க் 400வது விக்கெட்டை வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |