இப்படி கிடைச்சா வாய்ப்பை எல்லாம் விட்டா அடிக்காமா என்ன பண்னுவார்! ராஹனேவை வாழ்த்திய அவுஸ்திரேலிய வீரர்
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த ரஹானேவை, வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் வாழ்த்தியுள்ளார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 195 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதன் பின் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இதில் ரஹானே 104 ஓட்டங்களுடனும், ஜடேஜா 40 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து சதம் அடித்த ரஹானேவுக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில், அவுஸ்திரேலியா அணியில் விளையாடி வரும், வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார் ரஹானேவை வாழ்த்தியுள்ளார்.
அவர் இரண்டாம் நாள் ஆட்ட முடிவுக்கு பின் கூறுகையில், ரஹானேயின் சதம் மிகவும் சிறப்பு. அவர் நெருக்கடியை உள்வாங்கிக் கொண்டு, இந்திய அணிக்கு ஓட்டங்கள குவிப்பதற்கு தலைமை தாங்கி இந்திய அணி என்ற கப்பலை நிலைநிறுதிக் கொண்டார்.
இங்கே (மெல்போர்ன்) சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் எங்களுக்கு வாய்ப்புகளை வழங்கினார். அவர் சதம் அடிப்பதற்கு முன்பு ஐந்து முறை வாய்ப்புகள் வழங்கினார்.
அதில் மூன்று அல்லது நான்கு முறை அவுட் செய்திருக்கனும். ஆனால் ரன்அடிக்க வேண்டும் என்ற அதிர்ஷ்டம் அவருக்கு இருந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
