இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவைகள் இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது, தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அரசு அமைப்புகள் தகவல்களை பாதுகாப்பாக அணுகும் உரிமை பெறும் வரை செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி தொடங்கியது?
2024-ஆம் ஆண்டில், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) ஸ்டார்லிங்கிற்கு உரிமம் வழங்கியது.
புதிய தொலைத்தொடர்பு சட்டம் ஸ்டார்லிங்கிற்கு சட்டபூர்வமான ஆதரவை அளித்தது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், TRCSL ஸ்டார்லிங்கின் கட்டண திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது.
ஸ்டார்லிங்கின் இணையத் திட்டங்கள் ரூ.9,200 முதல் ரூ.1.8 மில்லியன் வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது.
ஏன் இடைநிறுத்தப்பட்டது?
இது குறித்து பேசிய தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சர் எரங்க வீரரத்ன, தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்டார்லிங்கின் தகவல் தணிக்கை (data interception) வசதி உறுதி செய்யப்பட வேண்டும்.
சட்ட விரோத செயல்களுக்கு ஸ்டார்லிங்கின் சேவைகள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் உரிமை இலங்கை பாதுகாப்பு அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
TRCSL மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஸ்டார்லிங்குடன் இதுகுறித்து தொடர்ந்து ஆலோசனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலை
சேவை தொடங்குவது தொடர்பான முடிவுகள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
அரசாங்க அனுமதி கிடைக்கும் வரை ஸ்டார்லிங்கின் சேவைகள் இலங்கையில் செயல்படாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |