மார்ச் 29 கனடா வானில் நிகழவிருக்கும் அதிசயம்., இரட்டை சூரிய உதயம் பார்க்கலாம்!
மார்ச் 29, 2025, அன்று வட அமெரிக்காவில் ஒரு பகுதி சூரிய கிரகணம் காணப்படும்.
குறிப்பாக, அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அட்லாண்டிக் கனடா பகுதிகளில் இது சூரியன் உதயமாகும் நேரத்தில் காணக்கூடிய சிறப்பு நிகழ்வாக இருக்கும்.
இந்த பகுதி கிரகணத்தின் போது, சில பகுதிகளில் "இரட்டை சூரிய உதயம்" (Double Sunrise) என்ற அபூர்வமான நிகழ்வை பார்க்கலாம்.
இதில், சூரியன் உதயமாகும் போது, மூன்றில் இரண்டு பகுதி நிலவால் மறைக்கப்படும்.
இதனால், சில இடங்களில் "சூரிய கொம்புகள்" (Solar Horns) என அழைக்கப்படும் விசித்திரமான தோற்றம் உருவாகும்.
கனடாவில் Forestville மற்றும் Saint Andrews ஆகிய இரண்டு இடங்களில் இந்த அதிசய நிகழ்வைக் காணமுடியும்.
கிரகணத்தை மிகத் தெளிவாக காணக்கூடிய முக்கிய இடங்கள்:
1 - Forestville, குயூபெக், கனடா
- சூரிய உதயம்: 6:20 AM EDT (கிழக்கு-வடகிழக்கு)
- கிரகணம் உச்சம்: 6:24 AM EDT
- சூரியன் 87% மறையும்
2- Saint Andrews, நியூப்ரன்ஸ்விக், கனடா
- உதயம்: 7:15 AM ADT
- கிரகணம் உச்சம்: 7:18 AM ADT
- சூரியன் 83% மறையும்
3- Quoddy Head State Park, மெய்ன், அமெரிக்கா
- உதயம்: 6:13 AM EDT
- கிரகணம் உச்சம்: 6:17 AM EDT
- சூரியன் 83% மறையும்
4- South Lubec, மெய்ன், அமெரிக்கா
- உதயம்: 6:13 AM EDT
- கிரகணம் உச்சம்: 6:18 AM EDT
- சூரியன் 83% மறையும்
5- Presque Isle, மெய்ன், அமெரிக்கா
- உதயம்: 6:16 AM EDT
- கிரகணம் உச்சம்: 6:21 AM EDT
- சூரியன் 85% மறையும்
இந்த அபூர்வமான நிகழ்வை பார்க்க, கிழக்கு திசையில் எந்த தடைகளும் இல்லாத இடங்களை தேர்வு செய்யவும். மேலும், பாதுகாப்பான சூரியக் கண்ணாடிகளை பயன்படுத்தி, கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கிரகணத்தைக் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |